பெற்றோர்களே குழந்தைகள் உங்கள் மூலமாக இந்த உலகத்திற்கு வந்தவர்கள். அவர்கள் மேல் உங்கள் எண்ணங்களையும் ஆசைகளையும் திணிக்காதீர்கள் - கலீல் ஜிப்ரான்

ஆம்.இங்கே பெற்றோர்கள் என்றாலே புனிதர்கள் பட்டம் கட்டிவிடுகிறார்கள். எல்லா பெற்றோர்களும் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.மாறாக முழுக்க முழுக்க சுயநலத்துடன் தான் யோசிக்கிறார்கள்.
பெற்றோர்கள் என்றாலே உன்னதமானவர்கள் என்ற கருத்து தவறு.
நமக்கு நல்ல பெற்றவர்கள் வாய்க்கப் பெற்றதால் உலகில் உள்ள எல்லாப் பெற்றவர்களும் அப்படித்தான் இருப்பார்கள் தப்புக் கணக்குப் போடுகிறோம்.

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் கணவன்/மனைவிக்கு அடுத்தபடியாக இருப்பது பெற்றோர்கள் மட்டுமே. இந்தியா போன்ற அடிப்படை பழமை வாத கொள்கைகள் புரையோடிப்போன நாட்டில் அவர்கள் பெற்றோர்கள் அவர்களுக்கு என்ன செய்தார்களோ அதையே அவர்கள் பிள்ளைகளுக்கும் செய்துவிடப் பார்க்கிறர்கள்.

குறிப்பாக , எமோஷனல் ப்ளாக்மெயில் நம் நாட்டில் மிக அதிகம். "இதைச் செய்யாவிட்டால் செத்துப்போவோம்" 
"அதைச் செய்யாவிட்டால் செத்துவிடுவோம்" என மன ரீதியாக சில குழந்தைகளுக்கு பெற்றோர் தொந்தரவு குடுக்கும் செயல்முறை நம் நாட்டில் இன்றளவும் தொடரும் அவலம்.வேறு வழியில்லாமல் நிறைய நபர்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள்.
மாற்றாக "செத்துப்போங்கள்" என்று தைரியமாகச் சொல்லலாம்.உலகத்தின் ஆகக் கொடிய நோய் உளவியல் அச்சுறுத்தல் தான்.அதிலிருந்து இந்த இந்தியப் பெற்றோர்கள் என்றைக்கும் வெளியே வரப்போவதேயில்லை.