அதிகமாக இருக்கும் எந்த ஒன்றின் மதிப்பும் தெரியாது.காரணம் அது தான் இருக்கிறதே என்ற அலட்சியம் மட்டும் தான் காரணம்.
முன்பெல்லாம் தீபாவளி/பொங்கலுக்கு நமக்கு தொலைக்காட்சியில் எப்பொழுதேனும் புதுத் திரைப்படங்கள் காண்பிக்கப்படும்.அப்பொழுது அதைக் கண்ணுங்கருத்துமாக கவனமாகப் பார்த்து முடித்துவிடுவோம்.இடைவேளையில் போடும் விளம்பரங்களைக் கூட விட்டு வைக்க மாட்டோம்.
ஆனால் இன்றைக்கு எவ்வளவு ஓடிடி தளங்கள்.எத்தனை வலை தொடர்கள், எத்தனை திரைப்படங்கள்.தியேட்டருக்குச் செல்லவும் வேண்டாம்.தீபாவளி பொங்கலுக்குக் காத்திருக்கவும் வேண்டாம்.நம்மால் ஒரு திரைப்படத்தை உருப்படியாக பொறுமையாகப் பார்க்க முடியவில்லை.எத்தனை திரைப்படங்களும், தொடர்களும் பாதியிலேயே நம்மால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என நமக்கே தெரியாது.காரணம் அது எங்கே போய்விடப் போகிறது என்பதுதான்.
அதே போல
நூலகத்தில் 10 நாட்களில் புத்தகத்தைப் படிக்க எடுத்து வரும் கால கட்டத்தில் சரியாக அந்த நூலைப் படித்து முடித்துவிட்டு ஒப்படைத்து கையோடு மற்றொரு நூலை எடுத்து வருவோம்.இன்றைக்கெல்லாம் நாம் நினைத்தால் ஆர்டர் செய்த நான்கைந்து நாட்களுக்குள் வீடு தேடி புத்தகம் கைக்கு வந்து சேர்ந்துவிடுகிறது.எத்தனை புத்தகத்தை வாங்கி வைத்த வேகத்தில் படித்து முடிக்கிறோம் என்றால் இல்லை.
காரணம், அது எங்க அந்த அலமாரியை விட்டு போகப் போகிறது என்றுதான்.இதுவே யாராவது ரெண்டு நாள் படிக்க எடித்துட்டுப் போயிட்டா நாம இன்னும் படிக்கலயேனு அதே நெனப்பாவே இருக்கும்.வந்ததுக்கு அப்றம் திரும்பப் படிப்போமானும் தெரியாது.
இதே போல தான்
அதிகமா ஒன்னு நமக்குக் கிடைச்சுட்டே இருந்தா அதோட மதிப்பு நமக்குப் பெருசா தெரியாது.
நம்மளும் அப்டித்தான்.நான் இருக்கேன் பாரு அப்டினு அதிகமா உங்க இருத்தலை அவசியமின்றி உணர்த்திக்கிட்டே இருக்கக் கூடாது.நீங்க ஃப்ரீயா இருக்கீங்க என்ற வார்த்தை கூட உங்க வாயில இருந்து வந்துடக் கூடாது.சரியான விசயத்திற்கும் , சரிப்பட்டு வரும் மனிதர்களுக்கும் உங்கள் நேரத்தையும் எனர்ஜியையும் குடுங்கள் தவறில்லை.
எல்லா நேரமும்
எல்லாருக்கும் நோ சொல்லாமல்
எதுக்கெடுத்தாலும் எஸ் சொல்லிட்டு
இருக்கதால உங்க மதிப்பு உண்மையில் வெகுவாகக் குறைந்துவிடும்.
அது வெளியே சென்று ஒருவரைச் சந்திப்பதாக இருக்கலாம்,
சாதாரண உரையாடலா இருக்கலாம்,
ஒரு திரைப்படத்துக்கு ஒருவரால் அழைக்கப்பட்டு போவதாக இருக்கலாம்.
அல்லது அழைத்துவிட்டார்கள் என்பதற்காக ஒரு விழாவிற்குச் செல்வதாக இருக்கலாம்.முடியாததை முடியாதுனு சொல்லப் பழகிக்கனும்.
சரி.
அப்டிச் சொல்லி அந்த நேரத்தை வச்சு என்ன செய்யப் போறேன்.அவங்களுக்காக எனக்குப் பிடிக்காததைச் செய்வதில் பெருசா வேறென்ன பாதிப்பு வந்துடப் போகுது என்று கேட்கலாம். உங்கள் ஒவ்வொரு செயல்களின் மூலம் மட்டும் தான் உங்கள் மதிப்பு அளவிடப்படும்.உங்கள் மதிப்பை
நீங்கள் தான் நீங்கள் செய்யும் செயல்களின் மூலம் காண்பிக்க வேண்டும்.பிறருக்காக என்று உங்கள் மதிப்பை நீங்கள் தாழ்த்திக் கொண்டால், அது இன்னுமின்னும் பல்வேறு பரிணாமங்களில் கீழிறக்கப்படும்.
~ Selvakumar Sankaranarayanan
0 Comments