அரசியலமைப்பு சொல்வதெல்லாம்
சுதந்திரத்திற்கு முன் இருந்த மதச்சார்புத் தளங்கள் சுதந்திரத்திற்குப் பிறகும் அப்படியே இருக்க வேண்டும்.அதில் எவ்வித மாற்றத்தையும் உண்டு பண்ணக் கூடாது.இது மத நல்லிணக்கத்தையும் சீர் குலைக்கும், மதப் பிரச்சனைகளையும் உண்டு பண்ணும் என்ற காரணம் தான் அது.
உ.பி. ஜமா மசூதி முகலாயர் காலத்தில் கட்டப்பட்டது.அதற்குள்ளும் வழிபாட்டுத் தலங்கள் இருந்ததென பேசுபொருளைக் கொண்டு வருகிறார்கள்.பாபர் மசூதிக்கு நடந்ததை , இங்கே அரசின் துணை கொண்டு செய்ய முயற்சி செய்கிறார்கள்.
அரசியலமைப்பின் படி பார்த்தால் இது முழுக்கத் தவறு.
அப்படிப் பார்த்தால் எத்தனை சமணத் தளங்கள், புத்தத் தளங்களை முன்பு சூரையாடினார்கள்? எத்தனை கோவில்கள் விஹாரங்கள் மேல் எழுப்பப்பட்டது என்று கணக்கெடுத்தால் என்ன ஆகும்? போனதைப் போனதாக விடுவது தான் மாண்பு.அது இவர்களுக்கு மருந்துக்குக் கூடத் தெரியாது.
நம்மிடம் இல்லாத கோயில்களா, சாமிகளா? இருக்கும் இடத்தில் கும்பிட்டால் ஆகாதா? இருக்கும் வேறொன்றை இடித்துத்தான் அதில் உங்கள் பக்தியை நிலைநாட்ட வேண்டுமா? பக்தி, இறை நம்பிக்கை என்பதும் மத வெறி என்பதும் இரு வேறான கோணங்கள்.இரண்டையுமே ஒன்றாக்கியது தான் இந்த பத்தாண்டு கால ஒன்றியக் கட்சியின் செயல்.
போலவே,
உங்கள் மதம் பிறிதொரு மதத்தை வெறுக்கத் தூண்டினால், உங்களுக்கு அந்த மதம் தேவையில்லை. யானைக்குப் பிடித்த மதம் போலத்தான் அது.அதீத பற்று கொண்ட எல்லாமே நமக்கு கண்மூடித்தனமான வெறுப்பை மட்டும் தான் போதிக்கும்.
எளிமையாகச் சொல்லப்போனால்
நாம் நம்முடன் வசிக்கும் சக நண்பர்களுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கிறோமோ என அவர்களைப் பயமுறுத்தும் ஒரு காலகட்டத்தில் நுழைந்துவிட்டோம்.
1 Comments
மதக் கொள்கைகளை சரியாக புரிந்து கொண்ட எவனும் "மதங்கொள்ள" மாட்டான்.
ReplyDelete