புத்தகம் : சர்வம் ஸ்டாலின் மயம்
பதிப்பகம் : கிழக்கு
ஆசிரியர் : மருதன்
ஜார் மன்னரின் கொடுங்கோலாட்சி நடந்து கொண்டிருந்த சோவியத் ரஷ்யாவில் அதை எதிர்த்து முடியாட்சியை இறக்கப் போராடிய ஒரு புரட்சியாளனின் கதைதான் இப்புத்தகம்.
நிலவுடமையாளர்களும், பெரு முதலாளிகளும் தொழிலாளர்களை பாட்டாளி வர்க்கத்தை எப்படியெல்லாம் சுரண்டினார்கள் என்பதை கண்டு வெகுண்ட தோழர்களின் எழுச்சியே அங்கே கம்யூனிசம் வேரூன்றக் காரணம்.
சிகப்பு என்றாலே ஆபத்து என்ற நிலையில் தான் கம்யூனிசத்தை ஜார் ஆட்சி வைத்திருந்தது.ஆனால் இன்று சிகப்பை , சோசியலிசத்தை, பொதுவுடமையை பெருமையாகவும் பெரியதாகவும் காட்டிக் கொள்ளும் அளவிற்கு அதை மக்களிடம் முன்னிறுத்திக் காண்பித்த பெருமை ஸ்டாலினையே சேரும்.
ஸ்டாலின் தான் உலகின் முதல் கம்யூனிச நாட்டை உருவாக்கினார்.லெனினின் செல்லப் பிள்ளையாக, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸைப் பின்பற்றி கருத்தியல் ரீதியாக மக்களை ஒடுக்குமுறையில் இருந்து மீட்டெடுத்தவர்.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரைக் கண்டு உலக நாடுகள் எல்லாம் அஞ்சிய பொழுது ஹிட்லரை ஒடுக்கியவர் ஸ்டாலின் தான்.போர் சமயத்தில் ரஷ்யா ஒரு பூனையாகத்தான் இருந்தது.அதைப் புலியாக்கியவர் ஸ்டாலின் தான்.
ஸ்டாலினின் இயற்பெயர் ஜோசப் இவானாவிச்.அவர் எழுதும் கட்டுரைகளைப் படித்து வியந்த லெனின்
உன் நெஞ்சுரமான கட்டுரைகளில் 'ஸ்டாலின்' என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என்று அதைச் சூட்டினார்.
பின்னாளில் இவர் அனைவராலும் ஸ்டாலின் என்றே அழைக்கப்பட்டார்.
வரலாறும் அந்தப் பெயரையே தக்கவைத்துக் கொண்டது.
ஸ்டாலின் என்ற சொல்லின் பொருள்
- எஃகைப் போல் வலிமையானவர்.
மிகச் சரிதான்.
0 Comments