யூட்யூப் செயலியில் 
எப்படி நமக்கு வீடியோ காண்பிக்கப்படுகிறது என்றால் நாம் இதுவரை என்னவெல்லாம் பார்த்திருக்கிறோமோ அதன் அடிப்படையில் மட்டும் தான்.

உதாரணமாக நாம் பூனைக்குட்டி வீடியோவாகத் தேடிப் பார்த்திருந்தால் நமக்கு அழகழகான பூனைக்குட்டிகள் வீடியோக்கள் வரும்.சமையல், அரசியல் கட்சி விவாதங்கள், மாடித்தோட்டம், இலக்கியம், பங்குச்சந்தை என்று என்னவெல்லாம் நீங்கள் ஒரு முறை ஆர்வத்துடன் பார்த்திருக்கிறீர்களோ அது திரும்பத் திரும்பக் காண்பிக்கும்.

'இப்படியெல்லாம் எனக்கு வேண்டாம், நான் என்ன தேடுகிறேனோ அதை மட்டும் பார்த்தால் போதும்' என்று நீங்கள் நினைத்தால் YouTube - settings - Manage All history ல் இதுவரை நீங்கள் பார்த்த History எல்லாம் Delete செய்துவிடுங்கள்.
அடுத்து கையோடு Turn off History செய்துவிடுங்கள்.முடிந்தது.

இனி உங்களுக்கு வீடியோவோ/ரீல்ஸ் வகைகளான ஷார்ட்ஸ் என்று எதுவுமே காண்பிக்கப்படமாட்டாது.

இரண்டு படங்களை இணைத்துள்ளேன்.
1.turn off history செய்த பிறகு யூட்யூப் செயலியின் முகப்புப் பக்கம் 
2.shorts பக்கத்தின் முகப்பு