முக நூலில் எனக்கு அறவே பிடிக்காத இரண்டு விசயங்கள்.

1.புத்தக விமர்சனம்
2.சினிமா விமர்சனம்
இரண்டுமே அளவாக இருக்க வேண்டும்.அவ்வளவு தான்.நிறை குறையும் கூட அளவாகச் சொல்லலாம்.ஒருத்தருக்குப் பிடிப்பது இன்னொருவருக்குப் பிடிக்காமல் போகலாம்.அதே போல ஒருத்தருக்குப் பிடிக்காமலிருப்பது இன்னொருவருக்குப் பிடிக்கலாம்.
புத்தக விமர்சனம் என்கிற பெயரில் அட்டை டூ அட்டை வரிக்கு வரிப் போடுவதைச் சிலர் வேலையாக வைத்திருக்கிறார்கள்.புத்தக விமர்சனம் என்பது படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும் . "இந்த பாருங்க எல்லாமே நான் எழுதிட்டேன்..இவ்ளோதான் இந்த புக் பத்தி" என்பதன் மூலம் படிக்கச் சிலருக்கு ஒவ்வாமை உண்டாகலாம்.படிக்கத் தோன்றிய அந்த புத்தகத்தை ,"அடடா அந்த பிரபலமே சொல்லிட்டார் அப்ப நல்லா இருக்காது" என்ற எண்ணம் ஏற்பட்டு படிக்காமல் விட்டுவிடுவார்கள்.யார் கண்டார் அது அவர்களது வாழ்க்கையையே புரட்டிப் போடக் கூடிய ஒன்றாகக் கூட இருக்கலாம்.
சினிமா விமர்சனம் என்கிற போர்வையில் ஹீரோவின் கட்டம் போட்ட சட்டைக் கலரில் ஆரம்பித்து கட்டக் கடைசி கிளைமேக்ஸ் வரை சொல்வதை சிலர் வழக்கமென வைத்திருக்கிறார்கள். "நான் முதலில் பார்த்துவிட்டேன்"என்பதைச் சொல்ல ஒரு சிலர்.. "பார் நான் என்ன என்ன டீடெயிலிங் எல்லாம் நுணுக்காம நோட் பண்ணி ஆராய்ச்சி செய்து இண்டெலக்சுவல் விமர்சனம்" செய்கிறேன் என்று சிலர்.
புத்தகத்துக்குச் சொன்னது தான் இதற்கும்.
"பிரபலப் பதிவரே சொல்லிட்டார் படம் மொக்கையாமே" எனும் நம்பிக்கைகள்.
பிறகு இன்னும் ஒரு சிலர் "நான் கூட நல்லாருக்கும்னு நெனச்சு டிக்கெட் புக் பண்ணிட்டேனே" என்கிறார்கள்.ஆக இவர்கள் படம் பார்க்க ஆரம்பிக்கும் பொழுதே கருத்துத் திணிப்புகளுக்குள் ஆட்பட்டுத் தான் செல்கிறார்கள்.பிறகெப்படி அவர்களுக்குப் பிடித்தாலும் இரசிக்க முடியும்.மலையாளப் படமென்றாலே ஆஸ்கர் லெவல் (சில நல்ல படங்கள் தந்து கொண்டே இருக்கிறார்கள்) என்று சொல்லும் அதே நபர்கள் தமிழில் வித்தியாசமாகவோ, வேறு ஏதோ முயற்சித்தால் இது கதைக்காகாது என்று முடித்துக் கட்டிவிடுவார்கள்.மசாலாப் படங்களைப் பார்த்துப் பழகி அதிலிருந்து வேறுபட்ட படங்களை உப்புச் சப்பில்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.
இதையும் தாண்டி இன்னும் ஒரு சிலர் இருக்கிறார்கள்.பிரபல பதிவர்கள் எதைச் செய்தாலும் அதை ஆமென்பது.உதாரணமாக உப்மா.உப்மாக்கு என்ன குறைனு எனக்கு இன்னைக்குத் தேதி வரைக்கும் தெரில.ஒருத்தர் பிடிக்கலன்னு பதிவு போட்டுட்டா அவ்ளோதான்.(சரி அவங்களுக்குப் பிடிக்காததா இருக்கலாம்..அதாவது எழுதுன அந்த ஒருத்தருக்கு)உடனே உப்மா ஒரு உணவானு ஆளாளுக்கு அடிச்சுப் பிடிச்சு போஸ்ட் போட்டுட்டு இருப்பாங்க. அப்டி போடலானா ஜோதில ஐக்கியமாக முடியாதுனு நெனச்சுப்பாங்க.அவங்களுக்கு உப்மா பிடிச்சாலுமே கூட அப்டித்தான் காட்டிப்பாங்க(எனக்கு ஒரு சிலரைத் தெரியும்). உப்மா எப்டி டேஸ்டான சாப்பாடு...அதுவும் அந்த இட்லி உப்மாவெல்லாம்..சரி டாபிக் மாத்த வேணாம்!
உப்மா கதைதான் புத்தகத்துக்கும் , சினிமாக்கும்.அடுத்தவர்கள் மேதாவித்தனத்தை/கருத்தை நீங்களும் அப்படியே உடன்பட்டு ஆமோதித்து எதையும் உங்கள் வாழ்வில் இருந்து விலக்கிக் கொள்ளாதீர்கள்.
ஒரே வீட்டிலிருக்கும் நபர்களுக்குள்ளேயே கருத்து ஒத்துப் போகாது..இதில் இங்க ஒருத்தர் சொல்றத வச்சு ஒரு நானூறு,ஐநூறு மக்கள் எப்படியய்யா ஒரு விசயத்தை அலட்சியமா தள்ளூறீங்க.அதுவும் நீங்கள் அறியாத ஒரு விசயத்தில் அவர்கள் கருத்தை நம்புவதென்பது எவ்வளவு விபரீதம்.அந்த நம்பிக்கை எல்லா நேரமும் உங்களுக்குச் சாதகமாகவே அமையாது! எதுவாக இருந்தாலும் நீங்களே படித்து/ பார்த்து ஒரு முடிவெடுங்கள்.
சரி அப்ப விமர்சனம் பண்றது தப்பா? அப்டினு கேட்க்கலாம்.
விமர்சனம் பண்றது தப்பே இல்லை.
விமர்சனம் பண்றேங்குற பேர்வழியில் 100 பக்க புத்தகத்திற்கு 150 பக்கம் ரைட்டப் எழுதுவதும், இரண்டரை மணி நேரச் சினிமாவிற்கு மூன்று மணி நேரம் உட்கார்ந்து படிக்குமளவு ரைட்டப் எழுதுவதும் என்னவென்று உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
அப்றம் இந்த உப்மா........வேணாம் இதுக்கு மேல எனக்கு கை வலிக்குது